நாங்கள் யார்

புலம்பெயர்விற்கான ஆய்வு மற்றும் அபிவிருத்தி மையம் (CMRD) இலங்கையில் கொழும்பினை அடிப்படையாக கொண்ட இலாப நோக்கமற்ற ஒரு நிறுவனமாகும். இம்மையம் ஆரம்ப அங்கத்தவர்கள் மூவரினால் 2010ஆம் ஆண்டில் அதன் கோட்பாட்டினை கலந்துரையாடப்பட்டு 2011 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவர்களுடைய பல்வகை அனுபவங்கள்,பலதரப்பட்ட திறமைகள், அவர்கள் இதுவரை மேற்கொண்ட செயற்திட்டங்கள் மற்றும் இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான புலம்பெயர்வு கற்கை தொடர்பான அவர்களின் ஆர்வம் போன்றன அவர்களை ஆய்வு நிறுவன ஒன்றினை நிறுவதற்கு தூண்டுபவைகளாக இருந்தன. செறிவான உள்நாட்டு வலையமைப்பு மற்றும் சர்வதேச தொடர்புகளை அவர்கள் கொண்டிருந்தாலும் நாட்டில் வளர்ந்து வரும் கல்விமான்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கிடையில் புலம்பெயர்வு ஆய்வினை அடிப்படையாக கொண்டு சர்வதேச தரநிலையிலான அனுபவ ரீதியான ஆய்வு முறையினை விருத்தி செய்ய விரும்புகின்றனர். இதனால் இம்மையம் புலம்பெயர்வுடன் மையப்படுத்திய அதாவது தொழிலாளர் புலம்பெயர்வு, ஆட்கடத்தல், அனர்த்தங்கள், அகதிகள் இடப்பெயர்வு மற்றும் மீள்குடியேற்றம் போன்ற ஆய்வில் பங்குகொள்வதற்கு அழைப்பு விடுக்கின்றது. இலங்கையினை மையமாக கொண்டு புலம்பெயர்வு மற்றும் அபிவிருத்திக்கிடையிலான இடைத்தொடர்பினை அறிவு மற்றும் புரிந்துணர்வினூடாக கட்டியெழுப்புதல் இதன் பிரதான நோக்கமாகும்.