உதவியை பொறுப்புக்கூறத்தக்கதாக வைத்திருத்தல்: நீண்டகால நெருக்கடியில் பன்மைத்துவ மனிதாபிமானம்

ஒஸ்லோ சமாதான ஆய்வு நிறுவகத்தின் பங்காண்மையுடன் (PRIO) நடாத்தப்பட்ட உதவிக் கணக்கு பற்றிய ஆய்வானது Aid Account குடிமைசார் மற்றும் தொழில்வாண்மைசார் மனிதாபிமான உதவி வழங்குனர்களால் புரிந்துகொள்ளப்பட்டவாறானதும், செயல்முறைப்படுத்தப்பட்டவாறானதுமான பொறுப்புக்கூறலின் ஒழுக்கவியல் மற்றும் சமூகப் பரிமாணங்களை வரைபடமிடுதல், ஆவணப்படுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டுள்ளது. இச்செயற்றிட்டம் சம்பவக் கற்கை முறைமையையும் மற்றும் பங்குபற்றுகைசார் வரைபடமிடல், ஆவணப் பகுப்பாய்வு, பகுதியளவு கட்டமைக்கப்பட்ட நேர்காணல்கள் அத்துடன் கவனக்குவிவுக் கலந்துரையாடல்கள் (focus group discussions) உள்ளடங்கலான பூர்த்திநிலை பண்புசார் முறைமைகளையும் (complementary qualitative methods) பயன்படுத்துகின்றது. அவை, நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் இடம்பெயர்ந்து மீளத் திரும்பிய சமூகங்களுக்கிடையே பொறுப்புக்கூறல் கருத்தாக்கங்கள் மற்றும் செயல்முறைகள் பற்றிய நெறிமுறைசார், நிறுவனஞ்சார் மற்றும் அனுபவஞ்சார் பரிமாணங்களை ஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும். மேலும், அறிவை மேம்படுத்துவதன்மூலம், இச்செயற்றிட்டம் தொழில்வாண்மைசார் மனிதாபிமானச் செயலாற்றுனர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முடியுமென்றும், அதன்மூலம் உதவி வழங்குகையின் வினைத்திறனை அதிகரிக்க முடியுமென்றும் நம்புகின்றது.

சமூகங்களுக்கு வீட்டு உதவி