CMRD யின் ஆய்வு ஆவணங்கள்

CMRD யின் ஆய்வு ஆவணங்கள் அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை பரிமாற்றிக்கொள்வதற்கு உற்சாகப்படுத்துகிறது. இத்தொடரானது சமீபத்தில் முடிவடைந்த அல்லது தொடர்ந்துகொண்டிருக்கின்ற ஆய்வு கற்கைகளின் முடிவுகளை வடிவமைத்து காட்டுவதாகும். இதன் மூலம் புதிய கல்விசார் ஆய்வுகளை கல்விசார் சஞ்சிகைகள் மற்றும் புத்தகங்களில் வெளியிடுவதற்கு முன் பொதுவாகக் கிடைக்கக்கூடியதாக இருக்கும். படைப்புரிமை என்பது பொதுவாக கூட்டாக காணப்படும், ஆனால் பிரதான எழுத்தாளரின் பெயர் குறிக்கப்படும். இவ் ஆவணங்கள் பொதுவாக ஆங்கில மொழியில் காணப்பட்டாலும், சில ஆவணங்கள் சிங்களம் அல்லது தமிழ் மொழிகளிலும் காணப்படும்.

இத்தொடரானது இடப்பெயர்வு தொடர்பான அனைத்து கற்கை விதானங்களையும் மையப்படுத்தியதாகும். இதன் அணுகுமுறை பல்துறையானதுடன் CMRD யின் அங்கத்தவர்கள் கூட்டிணைப்பாளர்கள் மற்றும் ஏனைய ஆய்வாளர்கள் தமது ஆய்வு பத்திரங்கள் சமர்ப்பிப்பதற்கு உற்சாகப்படுத்துகிறது. தலைமை பதிப்பாளர் மற்றும் ஆலோசனைக் குழு, நிறுவனத்திற்குட்பட்ட வரையறைக்குள் ஆய்வுப் பத்திரங்களை முகாமைப்படுத்தும். அனைத்து ஆய்வுப் பத்திரங்களும் வெளியிடப்படுவதற்கு முன் ஒன்று அல்லது இரு விடய வல்லுனர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் திருத்தங்கள், தொகுத்தல், வடிவமைத்தல் எனும் செயன்முறைக்கு உட்படுத்தப்படும். ஆய்வுப் பத்திரங்கள் மின்னியல் வடிவத்தில் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதுடன் மின்னஞ்சல் மூலமும் விநியோகிக்கப்படும்.

CMRD யின் ஆய்வு ஆவணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)


போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம், உதவி மற்றும் மீட்பு: இலங்கையில் ஒரு பொருளாதார பகுப்பாய்வு

டனேஷ் ஜயதிலக்க

Aid and recoveryஇலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட, உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் பொருளாதார மீட்சி பற்றிய கலாநிதி பட்டத்துக்கான ஆய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களை இந்த ஆய்வறிக்கை கொண்டுள்ளது. இந்த ஆய்வு போரினால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமம் குறித்து கவனம் செலுத்தியது. அங்குள்ள மக்கள் 2006 இல் ஏற்பட்ட இடப்பெயர்வு மற்றும் 2007 இல் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றம் காரணமாக, பரந்தளவில் வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரம் என்பவற்றுக்கான நன்கொடை உதவிகளைப் பெற்றிருந்தனர். மானிய வகையிலான கொடையளிப்பு காணப்பட்ட போதிலும், வீடமைப்புக்கான உதவி மற்றும் வருமான மீட்பு என்பவற்றுக்கிடையே நுண்ணிய தொடர்பொன்று இருந்ததாக ஆய்வின் கண்டறிதல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, பால்நிலை மற்றும் சுகாதாரம் போன்ற காரணிகள் முக்கிய கரிசனைகளாகக் காணப்படுவதனால், வாழ்வாதார உதவிகளானவை மீட்பு மற்றும் பொருளாதார நிலைபேண்தகு தன்மை என்பவற்றுடன் நேரடியாக இணைத்தொடர்புகளைக் கொண்டு காணப்பட்டன. இது உதவிகளின் வினைத்திறன் அதிகரிக்கப்படுவதைப் பரிசீலிப்பதற்குத் தேவையான வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரம் என்பவற்றுக்கு இடையேயான வளப்பகிர்வை உட்கிடையாகக் கொண்டுள்ளது.

(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)


போருக்குப் பின்னரான சமூக இயங்குநிலையின் மீது புலம்பெயர் சமூகத்தினரின் செல்வாக்கு: இலங்கையின் நிலை

ரஜித் டபள்யூ.டீ. லக்ஸ்மன் மற்றும் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம்

Reasons to Stayஇந்த ஆய்வறிக்கை போருக்குப் பின்னரான இலங்கையில் புலம்பெயர் சமூகத்தினரின் செல்வாக்கு மற்றும் சமூக இயங்குநிலை என்பவற்றுக்கிடையேயுள்ள சிக்கலான இடைத்தொடர்புகளை ஆய்வுக்குட்படுத்துகின்றது. சமூக இயங்குநிலை என்பது போருக்குப் பின்னருள்ள மீட்புக்கான ஒரு முக்கிய மூலக்கூறாகும் என்பதுடன் அது புலம்பெயர் சமூகத்தவரது ஈடுபாட்டின் பல்வேறுபட்ட மூலக்கூறுகளுடன் தொடர்புடையதாகவும் இருக்க முடியும். மீட்டெடுப்பின் செல்நெறி மற்றும் வீச்சு பற்றியும், அவை புலம்பெயர் சமூகத்தவரின் ஈடுபாட்டிலுள்ள மாற்றங்களுடன் எந்தளவுக்குத் தொடர்புடையவையாக இருக்கும் என்பது பற்றியும் இந்த ஆய்வு கரிசனை செலுத்துகிறது. போர் முடிவடைந்த பின்னர் புலம்பெயர் சமூகத்தவரின் ஈடுபாடுகள் பல்வேறுபட்ட மாற்றங்களுக்கான சமூக முன்னேற்றத்தின் பாகமொன்றாக கணிக்கப்பட்ட அதேவேளை, போர் முடிவடைந்தமையால் சமூக இயங்குநிலை அதிகரித்ததுடன் குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளும் கணிசமானளவு மேம்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியதாக இந்த ஆய்வின் கண்டறிதல்கள் வெளிப்படுத்துகின்றன.

(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)


பிரச்சினைகள் மற்றும் நல்வாழ்வுக்கு மத்தியில் ‘தங்குவதற்கான காரணங்களைக் கண்டறிதல்.’ கொழும்பில் இரண்டு குறைவருமானக் குடியிருப்புக்கள் தொடர்பான விடய ஆய்வு

எழுத்தாளர்கள்: இரேஷா எம். லக்ஷ்மன், மொஹிடீன் எம். அலிகான் மற்றும் அப்துல்லாஹ் அஸாம்

Reasons to Stayபொவ் மற்றும் மெக்கிரேகர் (2014) ஆகியோர் முன்வைத்த நல்வாழ்வு (well-being model) மாதிரியினைப் பயன்படுத்தி இலங்கையில் இரண்டு குறைவருமான குடியிருப்புக்களிலிருந்து 30 நேர்காணல்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளை இவ் ஆவணம் பகுத்தாராய்ந்துள்ளது. நல்வாழ்விற்கான மூன்று பரிணாமங்களான 1) பொருள் 2) தொடர்புகள் மற்றும் 3) அகவயம் என்பன 1) வீ ட்டின் தரம், பெளதீகச் சூழலின் தரம், கல்வி வாய்ப்புக்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு: 2) சமூக தொடர்புகளின் இயல்பு மற்றும் பயன்பாடு: மற்றும் 3) சமூகம் தொடர்பான வெளியாட்களின் எண்ணங்களும் குடியிருப்பாளர்களின் உணர்வுகளின் மீதான அதன் தாக்கங்கள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)